• This is slide 1 description. Go to Edit HTML of your blogger blog. Find these sentences. You can replace these sentences with your own words.
  • This is slide 2 description. Go to Edit HTML of your blogger blog. Find these sentences. You can replace these sentences with your own words.
  • This is slide 3 description. Go to Edit HTML of your blogger blog. Find these sentences. You can replace these sentences with your own words.
  • This is slide 4 description. Go to Edit HTML of your blogger blog. Find these sentences. You can replace these sentences with your own words.
  • This is slide 5 description. Go to Edit HTML of your blogger blog. Find these sentences. You can replace these sentences with your own words.

Tuesday, January 15, 2019

சிகிரியா

சிகிரியா (Sigiriya / Lion Rockசிங்களம்සීගිරියஇலங்கையின் இணையற்ற கலைப் பாரம்பரியத்தின் சின்னமாகக் கருதப்படுகிறது. இது மாத்தளை மாவட்டத்தில் தம்புள்ள நகரத்திற்கு அண்மையில் அமைந்துள்ளது. 1144-அடி உயரமான இக்குன்றினுள் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சித்திரங்கள் பல உள்ளன. இவை 6-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். எதிரிகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே இக்கோட்டையை முதலாம் காசியப்பன் (கி.பி. 477-495) அமைத்தான். கோட்டையை சுற்றி அகழியும் கட்டப்பட்டுள்ளது. சிகிரியா குன்றானது ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (UNESCO) பாதுகாக்கப்படவேண்டிய உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது. காசியப்பன் தாதுசேன மன்னனின் 2 ஆவது மனைவிக்கு பிறந்த மகனாவான். தாதுசேனனுக்குப் பின் பட்டத்து இராணிக்குப் பிறந்த முகலனுக்கே அரச உரிமையுண்டு. எனினும் காசியப்பன் தந்தையைக் கொன்று, சிகிரியாவில் கோட்டை அமைத்து அரசாட்சி எய்தினான்.இக் குகையினுள் சுவரோவியங்கள் இயற்கை வர்ணங்கள் கொண்டு வரையப்பட்ட பல சித்திரங்கள் காணப்படுகின்றன. இவைகளில் பல இன்னும் அழியாமல் அழகாகக் காட்சி தருகின்றது. இந்த ஓவியங்களில் காணப்படும் பெண்களை தேவதைகள் என சிலரும், காசியப்பனின் மனைவிகள் என சிலரும் குறிப்பிடுகிறார்கள். சிலர் கையில் தட்டை ஏந்தியவாறும், சிலர் மலர்க்கொத்தை ஏந்தியவாறும், சிலர் மேலாடை இன்றியும், சிலர் மேலாடையுடனும், தனித்தும், கூட்டமாகவும் இருக்குமாறு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

Monday, January 14, 2019

இலங்கை


                                                                         
 
இலங்கை   
இலங்கை இந்து சமுத்திரத்தில் அமைந்துள்ள ஒரு தீவாகும், இதன் வடகிழக்கே வங்காள விரிகுடா உள்ளது. இது இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து மன்னார் வளைகுடாவினால் துண்டிக்கப்பட்டுள்ள போதும், இதன் அமைவு இந்திய பாறைத்தட்டிலேயே உள்ளது. ஸ்ரீ இராமபிரானால் கட்டப்பட்ட இராமர் அணை எனப்படும் நிலத்துண்டம், இலங்கையை இந்தியத் தரையுடன் மத்தியகாலம் வரை இணைத்திருந்தது. இது 1480 ஆம் ஆண்டளவில் ஏற்பட்ட சூறாவளியில்ஊடறுக்கப்பட்டு, தற்போது இடையிடையே சுண்ணாம்புக் கற்பாறைத் தீவுத்தொடர்களைக் கொண்டவோர் மிகவும் ஆழம் குன்றிய நீர்ப்பரப்பாகவே காணப்படுகிறது.
இலங்கை உலகிலுள்ள மிகப் பழைமை வாய்ந்த நிலப்பகுதிகளில் ஒன்றாகும். இந்திய பாறைத்தட்டின் மத்தியில் அமைந்துள்ளதால் எரிமலை, நிலநடுக்கம் போன்றவை இலங்கையை அனேகமாக பாதிப்பதில்லை. இதன் 90% ஆன நிலப்பரப்பு 2 பில்லியன் காலத்துக்கு முந்திய பாறைத்தொடர்களில் அமைந்துள்ளது. மேலும் இந்த பாறைத்தொடர்களில் நடத்திய ஆராய்ச்சிகளின் விளைவாக இந்தியத் துணைக்கண்டம் முன்பு குமரிக்கண்டமெனும் பெரியதோர் தென்நிலக் கண்டத்தின் பாகமாக இருந்ததாக அறியப்படுகிறது. ஆனால் சுமார் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உலகின் உள்ளார்ந்த அமுக்கங்களின் காரணமாக இந்த பாரிய கண்டம் பிளவுபடத் தொடங்கியது. பின்னர் 45 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிளவுபட்ட இந்திய கண்டம் ஆசிய கண்டத்துடன் மோதி இமயமலைச்சாரல் எற்பட்டது. இது இன்னமும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
மாங்காய் வடிவிலான இத்தீவை மூன்று பெரும்நிலப்பிரிவுகளாக பிரிக்கலாம், அவையாவன கரையோர தாழ்நிலம், உட்புற சமவெளி, மத்திய மலைநாடு அல்லது உயர்நிலம் ஆகும்.
மத்திய மலைநாடானது மிகவும் உயர்ந்த மலைத்தொடர்களையும், ஆறுகளையும், நீர்வீழ்ச்சிகளையும் கொண்ட அழகான பிரதேசமாகும். இங்கு இலங்கையில் அதி உயர்ந்த மலையாகிய, 2,524 மீட்டர் உயரம் கொண்ட பீதுறுதாலகால மலையும், நான்மதத்தினரிடையும் புகழ் பெற்றதும், புனிதத்தலமாக கருதப்படுவதுமான சிவனொளிபாத மலையும் அமைந்துள்ளது. இலங்கையின் மிக உயரமான நீர்வீழ்ச்சி பம்பரஹந்த. இலங்கையிலுள்ள ஆறுகள் தற்போது நீர்ப்பாசனத்திற்கும், மின்சக்தி உருவாக்கத்திலும் பயன்படுத்தப்படுகின்றன. இலங்கையிலுள்ள ஆறுகளில் மிகவும் நீளமானது மகாவலி கங்கை ஆகும். இந்த ஆறினைக் கொண்டு உருவான விக்டோரியா திட்டமானது ஆசியாவிலேயே மிகப் பெரிய திட்டமாக கருதப்படுகிறது. மகாவலி கங்கையானது இலங்கையின் மத்திய பிரதேசத்தில் ஆரம்பித்து வடதிசையில் சென்று, பின்னர் வடகிழக்கு நோக்கி பயணித்து, திருகோணமலையில் கடலில் சேர்கின்றது.
இலங்கையில் ஆறுகள் இல்லாத இடம் யாழ்ப்பாணம். இலங்கையில் அதிகம் மழை பெறும் இடம் வட்டவளை
.   
   .

Saturday, December 29, 2018

Friday, December 7, 2018

Wednesday, November 28, 2018

அதிபர் போட்டிப் பரீட்சைக்கான வினாக்கள்

                                                 
                                                            

  1. சன நெருக்கடி கூடிய பிரதேசங்களை இனங்கண்டு ஒரு பிரதேச  செயலாளர் பிரிவுக்கு இரு பாடசாலைகள் வீதம் தெரிவு செய்து அபிவிருத்தி செய்யும் திட்டமொன்றை அரசு முன்னெடுத்துள்ளது . இத்திட்டம் எவ்வாறு அழைக்கப்படும் ?                                    அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை
  2. தரம் ஒன்றிற்கு பாடசாலையில் மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் போதுகருத்திற்  கொள்ளப்படும் மிக முக்கிய விடயம் எது?                                                                                                                                                          பாடசாலைக்கு அண்மையில் உள்ள பிள்ளைகள் 
  3. தரம் ஒன்றிற்கு ஆகக் கூடுதலாக எத்தனை பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்க முடியும்?                                                                                                                             6
  4. அலுவலர்களின் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுமதிக்கும் போது பாடசாலை மற்றும் சேவை நிலையங்களுக்கு இடையில் கருத்திற் கொள்ளப்படும் தூர எல்லை யாது?                                                                               10 km
  5. 2017 இல் வரவு செலவுத் திட்டத்தில் பாடசாலைகளில் தொழி நுட்ப வசதிகளை வழங்குவதற்காக 50 கணினிகளைவழங்கும் திட்டத்தில் எத்தனை பாடசாலைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன ?                                   3500 பாடசாலைகள் 
  6. இலங்கையின் கல்வி வரலாற்றில் முக்கியமான கல்விச் சீர்திருத்தங்கள்  நிகழ்ந்த காலப்பகுதிகளாவன எவை?                                                       1943 - 1947                                                                                                                                     1972 - 1976                                                                                                                                     1981 - 1984                                                                                                                                     1997 - 1998
  7. 2018 இல் சிறுவர் தினத்திற்கான  கல்வி அமைச்சின்  தொனிப் பொருள் எது?                                                                                                                                                      '' தைரியமாக முன்னோக்கிச்செல்வதற்கான                                              எமது  சிறுவர்களைப் பலப்படுத்துவோம் '' 
  8. தரம் ஒன்றில் ஒரு வகுப்பறையில் அனுமதிக்கக் கூடிய மாணவர்களின் எண்ணிக்கை யாது?                                                                                               2019 - 37                                                                                                                                         2020 - 36                                                                                                                                         2021 - 35
  9. உயர் தரத்தில் தொழிநுட்பப் பிரிவில் கற்கும் மாணவர்களின் NVQ மட்டம் எத்தனையாவது?                                                                                                                   NVQ மட்டம் 3 
  10. நூல்கள் வெளியீடு செய்கையில் அவை தொடர்பான பதிவுகளை மேற்கொண்டு ISBN இலக்கம் வழங்கும் அரச நிறுவனம் எது?                                                                                                                                                     தேசிய நூலகங்கள் ஆவணங்கள் சபை 
  11. கிராமப் பிரதேசங்களில் கல்வியை மேம்படுத்தும் நோக்குடன்  கல்வி அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட புதிய வகைப் பாடசாலை எது?                                                                                                                                                   இசுறு 
  12. உயர் தரத்தில் தொழிநுட்பத் துறைப் பாடங்கள் அறிமுகப் படுத்தப்பட்ட ஆண்டு எது?                                                                                                                           2013 
  13. தேசிய பாடசாலைக்கும் ஏனைய பாடசாலைக்கும் இடையே  உள்ள வேறுபாடு?                                                                                                                                        தேசிய பாடசாலை - மத்திய அரசின் நிர்வாகம்                                    ஏனைய பாடசாலை - மாகாண அரசின்  நிர்வாகம் 
  14. தற்போது பாடசாலைகளில் சிற்றுண்டிச்சாலையில் வலியுறுத்தப்படும் உணவுகளில் பிரதானமானது எது?                                                            தானிய வகை 
  15. பாடசாலையில் நிதியை நேரடியாகக் கையாளும் பிரிவும் அதன் தலைவரும் யார்?                                                                                                                                பாடசாலை அபிவிருத்திக் குழு                                                                             அதிபர் - தலைவர் 
  16. பாடசாலையில் ஆசிரிய வாண்மைத்துவத்தை ஏற்படுத்தும் முகமாக நடைமுறையில் உள்ள செயற்றிட்டம் என்ன?                                                          SPBTD
  17. SPBTD என்பதன் விரிவு யாது?                                                                                                                       SCHOOL BASED PROFESSIONAL TEACHER DEVELOPMENT 
  18. அருகிலுள்ள பாடசாலை செயற்றிட்டத்தின் பணிக்கூற்று யாது?                                   சகல பாடசாலைகளையும் நவீனமயப்படுத்தல்
  19. சுரக் ஷா காப்புறுதி எத்தனையாம் ஆண்டு அறிமுகப்படுத்தப் பட்டது ?                                                                                                                                                                       2017
  20. சுரக் ஷா காப்புறுதி செயற்படுத்தப்படும் மூன்று பிரிவுகளும் எவை?                                                                                                                                                                           சுகாதாரம்                                                                                                                             விபத்துக் காப்புறுதி                                                                                                     விசேட கொடுப்பனவு   
  21. சுரக் ஷா  காப்புறுதியை வழங்கும் நிறுவனம் எது?                                                                   இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் 
  22. வாழ்க்கைத்தொழில் சார் பல்கலைக்கழகம் ( UNIVOTEC ) எங்கே    அமைந்துள்ளது?                                                                                                                                                    இரத்மலானை ( 1998 )
  23.  நவோதய பாடசாலைகள் எத்தனையாம் ஆண்டு உருவாக்கப் பட்டது?                                                                                                                                                                        2004
  24. பாடசாலை கல்வி அமைச்சு எத்தனையாம் ஆண்டு உருவாக்கப் பட்டது?                                                                                                                                                                       2001
  25.  முதலாவது தொழிநுட்பக் கல்லூரி எங்கே அமைக்கப்பட்டது?                                        மருதானை   

Saturday, November 24, 2018

அதிபர் போட்டிப் பரீட்சைக்கான வினாக்கள்

1.ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் நோக்கில் அவர்களது வாண்மை        விருத்திப் பயிற்சிகளை வழங்கும் அரச நிறுவனங்கள் 3 தருக?
                                                தேசிய கல்வியியற் கல்லூரிகள்
                                                ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை
                                                தேசிய கல்வி நிறுவகம்
2.பாடசாலை மாணவர்கள் பாதுகாப்பாகவும் குறைந்த செலவுடனும்
   உடல், உள அழுத்தமின்றி பாடசாலைக்குப் பயணிப்பதற்காக 2005
   ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட போக்குவரத்து சேவை எது?
                                                சிசு செரிய
3.க/ பொ/ த உயர்தரத்தில் பாடங்களுக்கு மேலதிகமாக காணப்படும்
   பொதுச்சாதாரணப் பரீட்சைக்கு பெறவேண்டிய குறைந்த பட்ச
   புள்ளிகள் எவ்வளவு ?
                                               30 
4.சுதந்திரத்தின் பின் இலங்கையின் கல்வியின் நோக்கம் என்ன?
                                               வாழ்க்கைத்திறனுக்கான கல்வி 
5.ஆகக்கூடுதலான அரச பாடசாலைகள் கொண்ட மாகாணம் எது?
                                              மத்திய மாகாணம் 
6.ஆகக்குறைந்த அரச பாடசாலைகள் கொண்ட மாகாணம் எது?
                                              வடமத்திய மாகாணம்
7.சார்க் வலயத்தில் உள்ள நாடுகளிடையே தேசிய வருமானத்தில்
   அதிகளவு சதவீதத்தை கல்விக்காக ஒதுக்கியுள்ள நாடு?
                                              இலங்கை 
8.மாகாண சபைகளுக்கு கல்வி அதிகாரம் வழங்கப்பட்டது                           எப்போது?
                                              13 வது அரசியல் யாப்புத் திருத்தத்தில் 
9.2018 இலங்கையின் வரவு செலவுத்திட்டத்தில் பாடசாலைப் பாடத்
   திட்டத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 4 துறைகள் எவை?
                                               மரபியல்         
                                              குறியீட்டியல் 
                                               ரோபோ தொழிநுட்பம்
                                              நனோ விஞ்ஞானம் 
10.இலங்கையில் சிறுவர் நீதிமன்றங்கள் உள்ள இடங்கள் எவை?
                                              பத்தரமுல்லை 
                                              யாழ்ப்பாணம் 
11.கற்றல்  கற்பித்தல் செயன் முறையில் அதிக கவனம் செலுத்த
      வேண்டியது?
                                              மாணவர் தேர்ச்சியை விருத்தி செய்தல்
12.க/ பொ/த உயர் தரப் பரீட்சையில் பரீட்சார்த்தி பெற்ற                                     புள்ளிகளின்  ரீதியில் தயாரிக்கப்படும் Z புள்ளி பயன் படுத்தப்               படுவது?
                                    பல்கலைக்கழகக் கல்விக்குத் தெரிவு செய்வதற்கு 
13.பாடசாலை மட்டக் கணிப்பீடு ( S B A ) இலங்கையில் எப்போது                 அறிமுகப்படுத்தப்பட்டது?
                                         1999
14.S B A திட்டத்திற்கு நிதியுதவி வழங்கிய அமைப்பு எது?
                                         ஆசிய அபிவிருத்தி வங்கி 
15.கல்வி அமைச்சினால் தேசிய கல்வி தொடர்பாக உருவாக்கப்பட்ட
     முக்கிய அபிவிருத்தித் திட்டத்தின் பெயர் என்ன?
                                        ESDP (கல்வித் துறை சார் அபிவிருத்தி நிகழ்ச்சித்                                                               திட்டம் )
16.ESDP திட்டம் எவ்வாண்டிலிருந்து எவ்வாண்டு வரைக்கும்உரியதாக
     உருவாக்கப்பட்டுள்ளது?
                                         2013 - 2018
17.பாடசாலை வருடாந்த செயற்றிறன் அறிக்கை அடுத்து வரும்
     ஆண்டின் எத்தினத்திற்கு முன் தயாரிக்கப்பட வேண்டும்?
                                         மார்ச் 31 இற்கு முன் 
18.இவ் இறுதி அறிக்கை யாரால் ஒப்பமிட்டு யாருக்கு ஒப்படைக்                -கப்படல் வேண்டும்?
                                         அதிபரால் - வலயக்கல்விப் பணிப்பாளருக்கு
19.இலங்கையின் கல்வி நிர்வாகக்கட்டமைப்பின் கூறுகள்எத்தனை?
                                         6 
20.இலங்கையின் கல்வி நிர்வாகக்கட்டமைப்பின் கூறுகளைத் தருக?
                                         கல்வி அமைச்சு 
                                         மாகாணக் கல்வி அமைச்சு 
                                         மாகாணக் கல்வித் திணைக்களம் 
                                         வலயக் கல்வி அலுவலகம் 
                                         கோட்டக் கல்வி அலுவலகம் 
                                         பாடசாலை 
21.கற்றல் கற்பித்தல் செயன் முறையில் மாணவர் பங்கு பற்றுகை             உயர்ந்த பட்சமாக உள்ள கற்பித்தல் முறை எது?
                                         மாணவர் மையக் கற்பித்தல் 
22.புதிய ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பு எப்போதுவெளியிடப்       பட்டது?
                                         23.10.2014
23.இலவசக் கல்விச் சட்டத்தின்படி கட்டணம் அறவிடப்படாத கல்வி
     மட்ட வீச்சு எது?
                                        தரம் 1 முதல் பல்கலைக்கழகம் வரை 
24.இலங்கையில் பல்கலைக்கழகத்திற்குப் பிரவேசிக்க மாணவர்
     தமது பாடத்துறைக்குரிய  பாடங்களுக்கு மேலதிகமாக கட்டாயம்
     சித்தியடைய வேண்டிய பாடம் எது?
                                       பொதுச்சாதாரணப் பரீட்சை 
25.ஆரம்பக் கல்வியில் தர விருத்தியினை ஏற்படுத்துவதற்காக                     யுனிசெப்  உதவியுடன் 2002 இல் உருவாக்கப்பட்ட பாடசாலை எது?
                                        சிறுவர் நட்புறவுப் பாடசாலை

Thursday, November 22, 2018

அதிபர் போட்டிப் பரீட்சைக்கான வினாக்கள்

1.வலயக் கல்வி  அலுவலகங்களில் காணப்படும் பிரிவுகள் எவை?
                                                             நிர்வாகப் பிரிவு
                                                              திட்டமிடல் பிரிவு
2.கோட்டக்கல்வி அதிகாரியின் பணிகள்?
                                                               பாடசாலையை மேற்பார்வை செய்தல்
                                                               பாடப்புத்தகங்களைப் பாதுகாத்தல்
3.பாடசாலைக் கலைத்திட் டத்தில் உள்ளடங்கும் பிரிவுகள் எவை?
                                                                முறைசார் கலைத்திட்டம்
                                                                 முறைசாரா கலைத்திட்டம்
                                                                 மறை கலைத்திட்டம்
4.பிள்ளையின் உயரமும் நிறையும் வயதிற்கு பொருத்தமாக                         உள்ளதா   எனக் காட்டும் சுட்டெண் யாது?
                                                                 BMI (BODY MASS INDEX)
5.தேசிய நிர்வாக   அடிப்படையில்   பாடசாலைக்  கல்வி                                    நிலையங்களின்   முக்கிய வகைகள் எவை?
                                                                 மத்திய அரச பாடசாலைகள்
                                                                 மாகாண பாடசாலைகள்
                                                                 பிரிவெனாக்கள்
6.இலங்கை அரச பாடசாலைகளின் வகைகள் எவை?
                                                                1 AB ( A/L கலை , வர்த்தகம், விஞ்ஞானம்)                                                                  1 C   (A/L  கலை , வர்த்தகம் )
                                                                TYPE 2 ( தரம் 11 வரை )
                                                                TYPE 1 ( தரம் 5 வரை மட்டும்)
7.தேசிய கல்விக்குறிக்கோள்கள்  எத்தனை?
                                                                 8
8.அடிப்படைக் கற்றல் தேர்ச்சிகள் எத்தனை?
                                                                 7
9.கடந்த 8 தசாப்தங்களில் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட
    கல்வி சீர்திருத்தங்கள் மூலம் அடையமுடியாத  குறிக்கோள் எது?
                                                                  வேலை உலகிற்கு தேவையான                                                                                     தேர்ச்சியை வழங்கமுடியாமை .
10.LOCO PARENTS என்றால் என்ன?
                                                                   இடம் மாறும் பெற்றோர்
11.பிள்ளை ஒன்றுக்கு பெற்றோர் இல்லாதபோது அந்தப்                                     பிள்ளையின்  பாதுகாவலராக ஏற்றுக்கொள்ளப்படக்கூடியவர்
     யார்?
                                                                  நீதி மன்றத்தால் பாதுகாவலராக                                                                                 பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட ஒருவர் .
12.கல்வியுடன் தொடர்புடைய அமைச்சுக்கள் எவை?
                                                                   கல்வி அமைச்சு   
                                                                   உயர் கல்வி அமைச்சு  
                                                                   இளைஞர் விவகார மற்றும் திறன்கள்                                                                                                           -அபிவிருத்தி அமைச்சு
13.இலங்கையில் கல்வியுடன் தொடர்புடைய அரச சேவைகள்?
                                                             இலங்கை கல்வி நிர்வாக சேவை SLEAS
                                                             இலங்கை அதிபர் சேவை SLPS
                                                             இலங்கை கல்வியியலாளர் சேவை SLTES 
14.கல்வி அமைச்சுடன் இணைக்கப்பட்டுள்ள திணைக்களங்கள்                 எவை?
                                                              இலங்கை பரீட்சைகள் திணைக்களம் 
                                                              கல்வி வெளியீட்டுத் திணைக்களம் 
                                                              தேசிய சுவடிகள் திணைக்களம் 
                                                              தொல்பொருளியல் திணைக்களம் 
15.இலங்கையின் பாடசாலைக் கல்வி தொடர்பானபாடவிதானத்தை
     தீர்மானிப்பது எது?
                                                                  தேசிய கல்வி நிறுவகம் 
16.சேர் ஆதர் சி . கிளார்க் இலங்கையின் எப்பல்கலைக்கழகத்தில்
     துணை வேந்தராக இருந்தார்?
                                                                   மொரட்டுவ பல்கலைக்கழகம் 
17.இலங்கையில் ஒரு பாடசாலை சராசரியாக எவ்வளவு நிலப்                        பரப்பை  பிரதிநிதித்துவப்படுத்துகின்றது?
                                                                   6.5 சதுர கிலோ மீற்றர்
18.'' UNIVO TEC''  எனப்படுவது யாது?
                                                         தொழிநுட்ப துறைசார் பல்கலைக்கழகம்
19.கல்வியுடன் தொடர்புடைய சில சர்வதேச தினங்கள்?
                                          உலக புத்தக தினம் - ஏப்ரல் 23 
                                         உலக சாரணர் தினம் - ஆகஸ்ட் 1 
                                         சர்வதேச எழுத்தறிவு தினம் - செப்டம்பர் 8
                                         உலக ஆசிரியர் தினம் - அக்டோபர் 5
                                         இலங்கை ஆசிரியர் தினம் - அக்டோபர் 6
                                         உலக தகவல் வளர்ச்சி தினம் -அக்டோபர் 24
                                        இலங்கையில் புத்தாக்குநர் தினம் -அக்டோபர் 26 
                                               சர்வதேச விஞ்ஞான தினம் -நவம்பர் 10  
                                               சர்வதேச மாணவர் தினம் - நவம்பர் 17
20.பேண்தகு அபிவிருத்தி பாடசாலை மட்ட தேசிய நிகழ்ச்சித்திட்டம்
     என்பது யாது?
                                               தன்னிறைவான சுபீட்சமான தேசமாக                                 நாட்டை  முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் நாட்டின் எதிர்கால சந்ததியினரை சிறந்ததொரு சமூகமாகக் கட்டி                  எழுப்புவதற்கான ஒரு நிகழ்ச்சித்திட்டம் . பாடசாலைப்                           பிள்ளைகளை அவதானம் நிறைந்த நடத்தைக்கோலங்களில் 
 இருந்து பாதுகாத்து நடைமுறைச் சூழலுக்கும் , சமூகத்திற்கும் 
 இசைந்து நடப்பதற்கு அவர்களைப் பழக்குவதுடன் அவர்களை 
 சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியவர்களாக ஊக்கப் 
 படுத்துதலே இச்செயற்றிட்டத்தின் பிரதான குறிக்கோளாகும் . 
21.பேண்தகு அபிவிருத்தி பாடசாலைமட்ட தேசிய நிகழ்ச்சித்                           திட்டத்தில்  உள்ளடங்கும் பிரிவுகள் எவை?
                                                   சுற்றாடல் பாதுகாப்பு 
                                                   போதைப்பொருள் தடுப்பு 
                                                   சிறுநீரக நோய் தடுப்பு 
                                                   பிள்ளைகளைப் பாதுகாப்போம் 
22.கற்றலுக்காக கற்றல் என்றால் என்ன?
                                                    வாழ்நாள் முழுவதும் கற்பதற்தேவையான 
                                                    நுட்பத்தை அதிகரித்தல் .
23.பௌத்த கற்கை நிலையங்களாக இருந்த வித்தியோத்தியா                     மற்றும்  வித்தியாலங்கார போன்ற பிரிவெனாக்கள் பிற்பட்ட 
     காலத்தில் எப்பல்கலைக்கழகங்களாக மாற்றம் பெற்றன?
                                                   ஸ்ரீ ஜெயவர்தன பல்கலைக்கழகம் 
                                                   களனி பல்கலைக்கழகம் 
24.தேர்ச்சி என்றால் என்ன? அதன் வகைகள் எவை?
                                                  அறிவு,திறன்,மனப்பாங்கு ,பிரயோகம்                            என்பவற்றின் கூட்டுச்செயற்பாடு தேர்ச்சி ஆகும். 
                                                    1.அடிப்படைக் கற்றல் தேர்ச்சி 
                                                    2.எதிர்பார்க்கப்பட்ட கற்றல் தேர்ச்சி 
25.மறை கலைத்திட்டம் எனப்படுவது யாது?
                                    பாடசாலையின் முறைசார்  கலைத்   திட்டத்திற்கு புறம்பாக தேர்ச்சி விருத்திக்கு உதவும் செயற்பாடுகள் .