Saturday, November 24, 2018

அதிபர் போட்டிப் பரீட்சைக்கான வினாக்கள்

1.ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் நோக்கில் அவர்களது வாண்மை        விருத்திப் பயிற்சிகளை வழங்கும் அரச நிறுவனங்கள் 3 தருக?
                                                தேசிய கல்வியியற் கல்லூரிகள்
                                                ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை
                                                தேசிய கல்வி நிறுவகம்
2.பாடசாலை மாணவர்கள் பாதுகாப்பாகவும் குறைந்த செலவுடனும்
   உடல், உள அழுத்தமின்றி பாடசாலைக்குப் பயணிப்பதற்காக 2005
   ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட போக்குவரத்து சேவை எது?
                                                சிசு செரிய
3.க/ பொ/ த உயர்தரத்தில் பாடங்களுக்கு மேலதிகமாக காணப்படும்
   பொதுச்சாதாரணப் பரீட்சைக்கு பெறவேண்டிய குறைந்த பட்ச
   புள்ளிகள் எவ்வளவு ?
                                               30 
4.சுதந்திரத்தின் பின் இலங்கையின் கல்வியின் நோக்கம் என்ன?
                                               வாழ்க்கைத்திறனுக்கான கல்வி 
5.ஆகக்கூடுதலான அரச பாடசாலைகள் கொண்ட மாகாணம் எது?
                                              மத்திய மாகாணம் 
6.ஆகக்குறைந்த அரச பாடசாலைகள் கொண்ட மாகாணம் எது?
                                              வடமத்திய மாகாணம்
7.சார்க் வலயத்தில் உள்ள நாடுகளிடையே தேசிய வருமானத்தில்
   அதிகளவு சதவீதத்தை கல்விக்காக ஒதுக்கியுள்ள நாடு?
                                              இலங்கை 
8.மாகாண சபைகளுக்கு கல்வி அதிகாரம் வழங்கப்பட்டது                           எப்போது?
                                              13 வது அரசியல் யாப்புத் திருத்தத்தில் 
9.2018 இலங்கையின் வரவு செலவுத்திட்டத்தில் பாடசாலைப் பாடத்
   திட்டத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 4 துறைகள் எவை?
                                               மரபியல்         
                                              குறியீட்டியல் 
                                               ரோபோ தொழிநுட்பம்
                                              நனோ விஞ்ஞானம் 
10.இலங்கையில் சிறுவர் நீதிமன்றங்கள் உள்ள இடங்கள் எவை?
                                              பத்தரமுல்லை 
                                              யாழ்ப்பாணம் 
11.கற்றல்  கற்பித்தல் செயன் முறையில் அதிக கவனம் செலுத்த
      வேண்டியது?
                                              மாணவர் தேர்ச்சியை விருத்தி செய்தல்
12.க/ பொ/த உயர் தரப் பரீட்சையில் பரீட்சார்த்தி பெற்ற                                     புள்ளிகளின்  ரீதியில் தயாரிக்கப்படும் Z புள்ளி பயன் படுத்தப்               படுவது?
                                    பல்கலைக்கழகக் கல்விக்குத் தெரிவு செய்வதற்கு 
13.பாடசாலை மட்டக் கணிப்பீடு ( S B A ) இலங்கையில் எப்போது                 அறிமுகப்படுத்தப்பட்டது?
                                         1999
14.S B A திட்டத்திற்கு நிதியுதவி வழங்கிய அமைப்பு எது?
                                         ஆசிய அபிவிருத்தி வங்கி 
15.கல்வி அமைச்சினால் தேசிய கல்வி தொடர்பாக உருவாக்கப்பட்ட
     முக்கிய அபிவிருத்தித் திட்டத்தின் பெயர் என்ன?
                                        ESDP (கல்வித் துறை சார் அபிவிருத்தி நிகழ்ச்சித்                                                               திட்டம் )
16.ESDP திட்டம் எவ்வாண்டிலிருந்து எவ்வாண்டு வரைக்கும்உரியதாக
     உருவாக்கப்பட்டுள்ளது?
                                         2013 - 2018
17.பாடசாலை வருடாந்த செயற்றிறன் அறிக்கை அடுத்து வரும்
     ஆண்டின் எத்தினத்திற்கு முன் தயாரிக்கப்பட வேண்டும்?
                                         மார்ச் 31 இற்கு முன் 
18.இவ் இறுதி அறிக்கை யாரால் ஒப்பமிட்டு யாருக்கு ஒப்படைக்                -கப்படல் வேண்டும்?
                                         அதிபரால் - வலயக்கல்விப் பணிப்பாளருக்கு
19.இலங்கையின் கல்வி நிர்வாகக்கட்டமைப்பின் கூறுகள்எத்தனை?
                                         6 
20.இலங்கையின் கல்வி நிர்வாகக்கட்டமைப்பின் கூறுகளைத் தருக?
                                         கல்வி அமைச்சு 
                                         மாகாணக் கல்வி அமைச்சு 
                                         மாகாணக் கல்வித் திணைக்களம் 
                                         வலயக் கல்வி அலுவலகம் 
                                         கோட்டக் கல்வி அலுவலகம் 
                                         பாடசாலை 
21.கற்றல் கற்பித்தல் செயன் முறையில் மாணவர் பங்கு பற்றுகை             உயர்ந்த பட்சமாக உள்ள கற்பித்தல் முறை எது?
                                         மாணவர் மையக் கற்பித்தல் 
22.புதிய ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பு எப்போதுவெளியிடப்       பட்டது?
                                         23.10.2014
23.இலவசக் கல்விச் சட்டத்தின்படி கட்டணம் அறவிடப்படாத கல்வி
     மட்ட வீச்சு எது?
                                        தரம் 1 முதல் பல்கலைக்கழகம் வரை 
24.இலங்கையில் பல்கலைக்கழகத்திற்குப் பிரவேசிக்க மாணவர்
     தமது பாடத்துறைக்குரிய  பாடங்களுக்கு மேலதிகமாக கட்டாயம்
     சித்தியடைய வேண்டிய பாடம் எது?
                                       பொதுச்சாதாரணப் பரீட்சை 
25.ஆரம்பக் கல்வியில் தர விருத்தியினை ஏற்படுத்துவதற்காக                     யுனிசெப்  உதவியுடன் 2002 இல் உருவாக்கப்பட்ட பாடசாலை எது?
                                        சிறுவர் நட்புறவுப் பாடசாலை

0 comments:

Post a Comment