- சன நெருக்கடி கூடிய பிரதேசங்களை இனங்கண்டு ஒரு பிரதேச செயலாளர் பிரிவுக்கு இரு பாடசாலைகள் வீதம் தெரிவு செய்து அபிவிருத்தி செய்யும் திட்டமொன்றை அரசு முன்னெடுத்துள்ளது . இத்திட்டம் எவ்வாறு அழைக்கப்படும் ? அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை
- தரம் ஒன்றிற்கு பாடசாலையில் மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் போதுகருத்திற் கொள்ளப்படும் மிக முக்கிய விடயம் எது? பாடசாலைக்கு அண்மையில் உள்ள பிள்ளைகள்
- தரம் ஒன்றிற்கு ஆகக் கூடுதலாக எத்தனை பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்க முடியும்? 6
- அலுவலர்களின் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுமதிக்கும் போது பாடசாலை மற்றும் சேவை நிலையங்களுக்கு இடையில் கருத்திற் கொள்ளப்படும் தூர எல்லை யாது? 10 km
- 2017 இல் வரவு செலவுத் திட்டத்தில் பாடசாலைகளில் தொழி நுட்ப வசதிகளை வழங்குவதற்காக 50 கணினிகளைவழங்கும் திட்டத்தில் எத்தனை பாடசாலைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன ? 3500 பாடசாலைகள்
- இலங்கையின் கல்வி வரலாற்றில் முக்கியமான கல்விச் சீர்திருத்தங்கள் நிகழ்ந்த காலப்பகுதிகளாவன எவை? 1943 - 1947 1972 - 1976 1981 - 1984 1997 - 1998
- 2018 இல் சிறுவர் தினத்திற்கான கல்வி அமைச்சின் தொனிப் பொருள் எது? '' தைரியமாக முன்னோக்கிச்செல்வதற்கான எமது சிறுவர்களைப் பலப்படுத்துவோம் ''
- தரம் ஒன்றில் ஒரு வகுப்பறையில் அனுமதிக்கக் கூடிய மாணவர்களின் எண்ணிக்கை யாது? 2019 - 37 2020 - 36 2021 - 35
- உயர் தரத்தில் தொழிநுட்பப் பிரிவில் கற்கும் மாணவர்களின் NVQ மட்டம் எத்தனையாவது? NVQ மட்டம் 3
- நூல்கள் வெளியீடு செய்கையில் அவை தொடர்பான பதிவுகளை மேற்கொண்டு ISBN இலக்கம் வழங்கும் அரச நிறுவனம் எது? தேசிய நூலகங்கள் ஆவணங்கள் சபை
- கிராமப் பிரதேசங்களில் கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் கல்வி அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட புதிய வகைப் பாடசாலை எது? இசுறு
- உயர் தரத்தில் தொழிநுட்பத் துறைப் பாடங்கள் அறிமுகப் படுத்தப்பட்ட ஆண்டு எது? 2013
- தேசிய பாடசாலைக்கும் ஏனைய பாடசாலைக்கும் இடையே உள்ள வேறுபாடு? தேசிய பாடசாலை - மத்திய அரசின் நிர்வாகம் ஏனைய பாடசாலை - மாகாண அரசின் நிர்வாகம்
- தற்போது பாடசாலைகளில் சிற்றுண்டிச்சாலையில் வலியுறுத்தப்படும் உணவுகளில் பிரதானமானது எது? தானிய வகை
- பாடசாலையில் நிதியை நேரடியாகக் கையாளும் பிரிவும் அதன் தலைவரும் யார்? பாடசாலை அபிவிருத்திக் குழு அதிபர் - தலைவர்
- பாடசாலையில் ஆசிரிய வாண்மைத்துவத்தை ஏற்படுத்தும் முகமாக நடைமுறையில் உள்ள செயற்றிட்டம் என்ன? SPBTD
- SPBTD என்பதன் விரிவு யாது? SCHOOL BASED PROFESSIONAL TEACHER DEVELOPMENT
- அருகிலுள்ள பாடசாலை செயற்றிட்டத்தின் பணிக்கூற்று யாது? சகல பாடசாலைகளையும் நவீனமயப்படுத்தல்
- சுரக் ஷா காப்புறுதி எத்தனையாம் ஆண்டு அறிமுகப்படுத்தப் பட்டது ? 2017
- சுரக் ஷா காப்புறுதி செயற்படுத்தப்படும் மூன்று பிரிவுகளும் எவை? சுகாதாரம் விபத்துக் காப்புறுதி விசேட கொடுப்பனவு
- சுரக் ஷா காப்புறுதியை வழங்கும் நிறுவனம் எது? இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம்
- வாழ்க்கைத்தொழில் சார் பல்கலைக்கழகம் ( UNIVOTEC ) எங்கே அமைந்துள்ளது? இரத்மலானை ( 1998 )
- நவோதய பாடசாலைகள் எத்தனையாம் ஆண்டு உருவாக்கப் பட்டது? 2004
- பாடசாலை கல்வி அமைச்சு எத்தனையாம் ஆண்டு உருவாக்கப் பட்டது? 2001
- முதலாவது தொழிநுட்பக் கல்லூரி எங்கே அமைக்கப்பட்டது? மருதானை
Wednesday, November 28, 2018
Subscribe to:
Post Comments (Atom)


0 comments:
Post a Comment