Monday, January 14, 2019

இலங்கை


                                                                         
 
இலங்கை   
இலங்கை இந்து சமுத்திரத்தில் அமைந்துள்ள ஒரு தீவாகும், இதன் வடகிழக்கே வங்காள விரிகுடா உள்ளது. இது இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து மன்னார் வளைகுடாவினால் துண்டிக்கப்பட்டுள்ள போதும், இதன் அமைவு இந்திய பாறைத்தட்டிலேயே உள்ளது. ஸ்ரீ இராமபிரானால் கட்டப்பட்ட இராமர் அணை எனப்படும் நிலத்துண்டம், இலங்கையை இந்தியத் தரையுடன் மத்தியகாலம் வரை இணைத்திருந்தது. இது 1480 ஆம் ஆண்டளவில் ஏற்பட்ட சூறாவளியில்ஊடறுக்கப்பட்டு, தற்போது இடையிடையே சுண்ணாம்புக் கற்பாறைத் தீவுத்தொடர்களைக் கொண்டவோர் மிகவும் ஆழம் குன்றிய நீர்ப்பரப்பாகவே காணப்படுகிறது.
இலங்கை உலகிலுள்ள மிகப் பழைமை வாய்ந்த நிலப்பகுதிகளில் ஒன்றாகும். இந்திய பாறைத்தட்டின் மத்தியில் அமைந்துள்ளதால் எரிமலை, நிலநடுக்கம் போன்றவை இலங்கையை அனேகமாக பாதிப்பதில்லை. இதன் 90% ஆன நிலப்பரப்பு 2 பில்லியன் காலத்துக்கு முந்திய பாறைத்தொடர்களில் அமைந்துள்ளது. மேலும் இந்த பாறைத்தொடர்களில் நடத்திய ஆராய்ச்சிகளின் விளைவாக இந்தியத் துணைக்கண்டம் முன்பு குமரிக்கண்டமெனும் பெரியதோர் தென்நிலக் கண்டத்தின் பாகமாக இருந்ததாக அறியப்படுகிறது. ஆனால் சுமார் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உலகின் உள்ளார்ந்த அமுக்கங்களின் காரணமாக இந்த பாரிய கண்டம் பிளவுபடத் தொடங்கியது. பின்னர் 45 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிளவுபட்ட இந்திய கண்டம் ஆசிய கண்டத்துடன் மோதி இமயமலைச்சாரல் எற்பட்டது. இது இன்னமும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
மாங்காய் வடிவிலான இத்தீவை மூன்று பெரும்நிலப்பிரிவுகளாக பிரிக்கலாம், அவையாவன கரையோர தாழ்நிலம், உட்புற சமவெளி, மத்திய மலைநாடு அல்லது உயர்நிலம் ஆகும்.
மத்திய மலைநாடானது மிகவும் உயர்ந்த மலைத்தொடர்களையும், ஆறுகளையும், நீர்வீழ்ச்சிகளையும் கொண்ட அழகான பிரதேசமாகும். இங்கு இலங்கையில் அதி உயர்ந்த மலையாகிய, 2,524 மீட்டர் உயரம் கொண்ட பீதுறுதாலகால மலையும், நான்மதத்தினரிடையும் புகழ் பெற்றதும், புனிதத்தலமாக கருதப்படுவதுமான சிவனொளிபாத மலையும் அமைந்துள்ளது. இலங்கையின் மிக உயரமான நீர்வீழ்ச்சி பம்பரஹந்த. இலங்கையிலுள்ள ஆறுகள் தற்போது நீர்ப்பாசனத்திற்கும், மின்சக்தி உருவாக்கத்திலும் பயன்படுத்தப்படுகின்றன. இலங்கையிலுள்ள ஆறுகளில் மிகவும் நீளமானது மகாவலி கங்கை ஆகும். இந்த ஆறினைக் கொண்டு உருவான விக்டோரியா திட்டமானது ஆசியாவிலேயே மிகப் பெரிய திட்டமாக கருதப்படுகிறது. மகாவலி கங்கையானது இலங்கையின் மத்திய பிரதேசத்தில் ஆரம்பித்து வடதிசையில் சென்று, பின்னர் வடகிழக்கு நோக்கி பயணித்து, திருகோணமலையில் கடலில் சேர்கின்றது.
இலங்கையில் ஆறுகள் இல்லாத இடம் யாழ்ப்பாணம். இலங்கையில் அதிகம் மழை பெறும் இடம் வட்டவளை
.   
   .

0 comments:

Post a Comment