போர்த்துக்கேயரால்
2.போர்த்துக்கேயரின் கல்விக் குறிக்கோள் யாது?
கத்தோலிக்க மதத்தைப் பரப்புதல்
3.ஒல்லாந்தரின் கல்விக் குறிக்கோள் யாது?
புரட்டஸ்தாந்து மதத்தைப் பரப்புதல்
4.ஆங்கிலேயர் காலத்தில் கல்விக்குப் பொறுப்பான நிறுவனங்கள்?
அமெரிக்கன் மிசனரி,லண்டன் மிசனரி, வெஸ்ஸியன் மிசனரி
5.ஒல்லாந்தர் காலத்தில் கல்விக்குப் பொறுப்பான நிறுவனம் எது?
ஸ்கொலார்கள் கொமிசன்
6.இலங்கையில் முதன் முதலில் மேற்கத்தேயக் கல்வியை அறிமுகம்
செய்தவர்கள் யார்?
போர்த்துக்கேயர்
7.மாகாணக் கல்வி அமைச்சிற்குப் பொறுப்பான அலுவலர் யார்?
மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் 8.கல்வி ஆரம்பப் பிள்ளைகளின் அபிவிருத்திக்குப் பொறுப்பான மத்திய அமைச்சு எது?
சிறுவர் விவகார அமைச்சு
9.இலங்கை மக்களின் நலன் கருதி நாட்டின் பல இடங்களிலும் உதவி நன்கொடை பாடசாலைகளை அமைத்தவர் யார்?
M.C சித்திலெப்பை
10.தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை எப்போது
ஆரம்பிக்கப்பட்டது?
1952
11.தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்படுவதன் நோக்கம் யாது?
உதவிப்பணம் வழங்கல்
பிரபல பாடசாலைகளில் சேர்த்தல்
12.பாடசாலையை விட்டு இடைவிலகியோருக்கான முறைசாராக்
கல்வியை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு?
1974.
13.பாடசாலையில் மாணவர்களின் நிதியைப் பெற்றுக்கொள்ள
முறையான ஏற்பாடுகள் எவை?
வருடாந்த சந்தாப்பணம்
வசதிகள் சேவைகள் கட்டணம்
14.பாடசாலை நடவடிக்கைகளுக்காக சில்லறைச் செலவுப் பணத்தில்இருந்து ஒரு தடவையில் செலுத்தக் கூடிய உயர்ந்த பட்ச கொடுப்பனவுத்தொகை யாது?
1500.00 ரூபாய்
15.பாடசாலை முகாமைத்துவக்குழுவில் உள்ளடங்க வேண்டிய உயர்ந்த பட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை?
12 ( ஒரு வருட பதவிக்காலம்)
16.ஆசிரியர் என்பதன் பொருள் யாது?
தவறைத் திருத்துபவர் (ஆசு-தவறு , இரியர்-திருத்துபவர்)
17.ஆசிரியரால் மாணவர்களிடம் விருத்தி செய்யப்படவேண்டியவை
எவை?
அறிவு,திறன்,மனப்பாங்கு
18.2018 இல் ஆசிரியர் தினத்திற்கான UNESCO வின் கருப்பொருள்?
''தகுதியுடைய ஆசிரியத்துவத்துக்கான
உரிமையே கல்விக்கான உரிமையாகும் ''
19.ஆசிரியர் தொழில் வாண்மை என்றால் என்ன?
ஆசிரியர்களால் பெறப்பட வேண்டிய ஒரு தன்மை.
20.இலங்கை ஆசிரியர் சேவை தரங்கள் எத்தனை?
5
21.இறுதிப் பாடவேளையும் ஆசிரியர் கடமையும் தொடர்பான கல்வி
அமைச்சின் சுற்று நிருபம் எது?
இலக்கம் 1981/01 திகதி 1989/01/31
22.இலங்கைக் கல்வி வெளியீட்டுத் திணைக்களம் எந்த அமைச்சின்
கீழ் செயற்படுகிறது?
கல்வி அமைச்சு
23.மாகாண கல்வி அமைப்பில் இருக்கின்ற அலுவலர்களிடையே
கல்வி தொழிநுட்பம் தொடர்பான அறிவைக் கொண்டிருப்பவர்?
மாகாண கல்விப் பணிப்பாளர்
24.தேசிய பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவரின்
ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பாக இறுதித் தீர்மானத்தை
மேற்கொள்ளும் நிறுவனம் எது?
பொதுச்சேவை ஆணைக்குழு
25.பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் யார்?
அதிபர்


0 comments:
Post a Comment