Wednesday, June 20, 2018

பச்சோந்தி நிறம் மாறும் விதம்.

ஓந்தி அல்லது பச்சோந்தி ஊர்வன பிரிவைச் சேர்ந்த ஒரு விலங்குக் குடும்பம். ஓந்திகளுள் ஒரு சில தம் மனநிலை, வெப்பம்ஒளி ஆகியவற்றைப் பொறுத்துத் தங்களின் தோலின் நிறத்தை மாற்றவல்லவை.
ஓந்திகளுள் சில இனங்கள், தாம் இருக்கும் இடத்திற்கு ஏற்றாற்போல் தமது நிறத்தை மாற்றிக்கொள்ளும் ஆற்றல் படைத்தன. இதற்கு காரணம் அவற்றின் தோலில் உள்ள நிற கலங்களுக்கும்மூளைப் பகுதிகளுக்கும் இடைவிடாது தொடர்பு இருந்துகொண்டேயிருப்பதாகும். பச்சோந்திக்கு காக்கைகழுகுகளால் ஆபத்து அதிகம். அதுமட்டுமல்லாமல் ஒரு பயந்த பிராணி. அதனால் ஒரு நிமிடத்திற்கு மேல் அது தன்னுடைய நிறத்தை மாற்றிக்கொள்ளும். பச்சோந்திக்கு இன்னொரு குணமும் உண்டு. பச்சோந்தி தன் ஒரு கண்ணால் ஒரு இடத்தையும் மற்றொரு கண்ணால் வேறு இடத்தையும் பார்க்கும் ஆற்றல் பெற்றது. பச்சோந்தியின் கண்கள் ஒரு பொருளின் உயரம்,அகலம்,ஆழம் போன்ற முப்பரிமாணங்களையும் காணக்கூடிய வகையில் அமைந்திருக்கின்றன.ஒவ்வொரு கண்னும் தனித்தனியாக வேலை செய்யக்கூடியது. 360 பாகை அளவுக்குப் பார்வை விரியும்.[1]
பச்சோந்திகள் கட்புலனாகும் ஒளியை மட்டுமன்றி புற ஊதாக்கதிர்களையும்கண்டுணரவல்லன.[2]

0 comments:

Post a Comment